மட்டக்குளியில் போதைப்பொருட்களுடன் பெண் கைது

78 0

கொழும்பு –  மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கதிரானவத்தை பிரதேசத்தில்  ஐஸ்  மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்  கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய பெண்ணொருவர்  ஆவர்.

சந்தேக நபரான பெண்ணிடமிருந்து 52 கிராம் 850 கிராம் ஐஸ் மற்றும் 02 கிலோ 100 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.