பங்களாதேஸின் அதிகாரிகள், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தொழில் அமைச்சருமான துலிப் சித்திக்கிற்கு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் பிரதமர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அவரது மாமியான சேக் ஹசீனாவின் ஆட்சி குறித்த விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக துலிப் சித்திக் சட்டவிரோதமாக நிலம் ஒன்றை பெற்றுக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலம் தொடர்பான விசாரணையை அந்த நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையகம் மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், சித்திக்கின் சார்பாக செயற்படும் சட்டத்தரணிகள், அதிகாரிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்தனர், அவை, அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ளனர்.
குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்களும் இல்லையென்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில், பங்களாதேஸை நாடுகடத்தல் நாடாக இங்கிலாந்து பட்டியலிட்டுள்ளது.
இதன்படி, இங்கிலாந்தில் இருந்து, ஒருவரை நாடு கடத்தவேண்டுமானால், பங்களாதேஸினால் தெளிவான ஆதாரங்கள் இங்கிலாந்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

