அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) பரஸ்பர வரிகள் என அழைக்கப்படும் வரிகள், முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்று சீன அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தாம் திட்டமிட்டிருந்த பல உலகளாவிய வரிகளுக்கு 90 நாள் இடைநிறுத்தத்தை ட்ரம்ப் இந்த வாரம் அறிவித்துள்ளார்.
ஆனால் சீன இறக்குமதிகள் மீதான வரிகளை 145 வீதமாக உயர்த்தினார். இந்த நிலையில், அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ‘பரஸ்பர வரிகள்’ என்ற தவறான நடைமுறையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.அத்துடன், சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று தாம் வலியுறுத்துவதாக, சீனாவின் வர்த்தக அமைச்சகம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

