கருணாநிதி அரசியல் வைரவிழா – சோனியாகாந்தி பங்கேற்பு

226 0

ஜூன் 3-ம் தேதி கருணாநிதி அரசியல் வைரவிழா நடைபெறவுள்ளதாகவும், அதில் சோனியாகாந்தி, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள் என்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் மாபெரும் சக்தியாக விளங்கி வரும் திமுக தலைவர் கருணாநிதி வருகின்ற ஜூன் 3-ம் தேதி தனது 94-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில், ஜூன் 3-ம் தேதி கருணாநிதி அரசியல் வைரவிழா நடைபெறவுள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார். முன்னதாக ஆர்.கே.நகரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என உளவுத்துறை மூலம் தெரிந்ததால் ஏதேதோ காரணங்கள் கூறி இடைத்தேர்தலை நிறுத்திவிட்டார்கள். மக்கள் ஒரே ஒரு வாக்களித்து மூன்று முதல்வர்களை பார்த்துவிட்டார்கள். தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது” என்று பேசினார்.