போக்கோ ஹரம் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி

229 0

சாட் நாட்டில் போக்கோ ஹரம் நடத்திய தாக்குதலில் 9 பேர் உட்பட 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவத் தளம் அருகே நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாட் நாட்டின் ராணுவத் தளம் அருகே நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கைகா ஏரியையொட்டியுள்ள ராணுவத் தளத்தை நோக்கி அதிகாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நைஜீரியா, கேமரூன், சாட் மற்றும் நைகர் உள்ளிட்ட பகுதிகளால் சூழப்பட்ட சாட் ஏரி போகோ ஹரம்களின் இலக்காகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு பயங்கரவாதிகள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஐ.எஸ். சார்பிலும் அச்சுறுத்தலை சாட் எதிர்கொண்டு வருகின்றது.

கடந்த எட்டு ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சனையில் இதுவரை மொத்தம் 20,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 26 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளனர்.