இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை (04) இரவு நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய பிரதமர் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்.
இதனால், இந்திய பிரதமரின் பாதுகாப்பை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதியை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





