காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

352 0
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது.
சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் ஊடாக காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கே இந்தியாவின் எக்சிம் வங்கி கடன் வழங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து  45.27 மில்லியன் டொலரைக் கடனாகப் பெற்று காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் இது தொடர்பான பத்திரங்களைச் சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து, இந்திய எக்சிம் வங்கியுடன் பேச்சுக்களை நடத்தி புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது. காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர், சரக்குக் கப்பல்களின் வர்த்தக நடவடிக்கைகளைக் கையாளும் திறனைப் பெறும். அதேவேளை, போரின் போது சேதமாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட 10 கப்பல்களின் சிதைவுகளை காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் இந்து 19.50மில்லியன் டொலர் செலவில் இந்தியா அகற்றிக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.