முல்லைத்தீவு மாவட்ட செயலக சாரதி விபத்தில் பலி

245 0

முல்லைத்தீவு மாவட்ட செயலக வாகனம் புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி  சாரதியான ஜயன்கோவிலடி  முள்ளியவளையை சேர்ந்த நாற்ப்பத்தொரு வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவர்  உயிரிளந்துள்ளதோடு  மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி  பணியாளர் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கெப் வண்டி, புத்தளத்திலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த லொறியுடன் மோதியே இந்த  விபத்து இடம்பெற்றுள்ளதோடு லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது

விபத்து தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்