முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்றபோது குறித்த சந்தேகநபரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக கைது செய்துள்ளனர் .

