பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் – மீட்பு பணியாளர்கள்.

75 0
image
யன்மாரை தாக்கியுள்ள பூகம்பம் காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மீட்புபணியாளர்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.

பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மண்டலாயில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியது, மீட்பு பணிகள் தொடர்வதால் அதனை மாத்திரம் எங்களால் தற்போது தெரிவிக்கமுடியும் என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை ஆனால் நூற்றுக்கணக்கிலிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.