திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு

103 0
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில்  2025/2026ஆம் ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பொன்னம்பலம் – ராணிதேவி தம்பதியின் கனிஷ்ட புதல்வியாவார்.

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர், கொழும்பு  பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டில் சட்டமாணி  பட்டத்தினைப் பெற்று,  2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக  பதவிப்பிரமாணம்  செய்து கொண்டார்.