கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில் முதலை

92 0

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் முதலை அச்சுறுத்தல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீன்பிடி படகுகளில் முதலை மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக  கடற்கரை பகுதிகளில் முதலைகள் உலாவி வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அதிகாரிகளை இலங்கை உயிர் பாதுகாப்புக் குழுமத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை ஆகிய கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.