இவ்வருடம் சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்றவர்களில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 592 பேர் போதைப்பொருள் பாவனைக்காக கைது செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுளு்ளதுடன் தண்டப் பணமாக ரூபா 60 இலட்சத்துக்கு மேல் அறவிடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி ஆரம்பமாகிய சிவனொளிபாத மலை யாத்திரையில் மார்ச் 23 திகதி வரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளியாகக் காணப்பட்டவர்களிடமிருந்து சுமார் 60 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை (அதாவது 6,029,324 ரூபா) அபராதமாகப் பெறப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்தவர்கள் எனத் தெரிய வருகிறது.
இவர்கள் அனைவரும் 20 முதல் 45 வயது வரையுள்ளவர்கள் எனப் பொலிசார் தெரிவித்தனர்.
ஹட்டனை சூழ உள்ள பொலிஸ் நிலையங்களில் மேற்படி போதைப்பொருள் வேட்டை தொடர்பாக, அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினரே கைது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

