சிரியாவில் பாதுகாப்பு வலையங்கள்: ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே ஒப்பந்தம்

222 0

சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்க ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறி வைத்து அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு தரப்பு படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ரஷ்யாவின் வான்வெளி படைகளும் உதவி வருகின்றது. கிளர்ச்சியாளர்களும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்க ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த குழுவினர் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நான்கு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
இதனையடுத்து 5-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜூலை மத்தியில் நடைபெறும் என்று கஜகஸ்தான் வெளியுறவுத் துறை மந்திரி காய்ரட் தெரிவித்தார்.
பாதுகாப்பு வலையங்கள் அமைப்பது சிரியா பிரச்சனையில் 50 சதவீதம் குறைந்துவிடும் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.