“சிவாகம கலாநிதி” தானு மஹாதேவ குருக்களின் ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை – இந்துக் குருமார் அமைப்பு

115 0
“சிவாகம கலாநிதி” தானு மஹாதேவ குருக்களின் ஆத்ம சிவப்பிராப்திக்கு இறை பிரார்த்தனை செய்வதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்துக் குருமார் அமைப்பு மேலும் தெரிவிக்கையில்,

எமது விப்ரசிரேஷ்டராக, அந்தணர்களின் உயர்வுக்கு குருகுல கல்வி முதல் பல்வேறு வழிகளில் பங்காற்றிய பெருந்தகை இன்று சிவபதமடைந்தார் என அறிந்து மிகவும் கவலை அடைந்தோம்.

பல்மொழி ஆளுமை மிக்கவராக, அன்புடன் அனைவரையும் அரவணைக்கும் பண்பாளராக திகழ்ந்தவர். யார் எந்த உதவி கேட்டாலும் உடனே தயங்காமல் வழிவகுப்பார். ஓர் ஆசான் எப்படி வாழ வேண்டும் என முன்னுதாரணமாக வாழ்ந்தவர்.

இந்தியாவில் உள்ள ஆதீனங்கள், குருகுல அதிபர்கள் உள்ளிட்ட பெரியோரது அன்புக்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவராக திகழ்ந்தவர்.

அண்மையில் தருமை ஆதீன 27வது நட்சத்திர குருமணிகள் நட்சத்திர குருமணிகளால் “சிவாகம கலாநிதி” எனு‌ம் சிறப்புடன் கௌரவம் வழங்கப்பட பெருந்தகை. இக்கௌரவத்தினை இந்திய துணை தூதுவர் குருக்கள் அவர்களின் இல்லம் தேடி சென்று வழங்கிமை குறிப்பிடத்தக்கது.

யாவரும் இறை நியதியை ஏற்க வேண்டிய சூழ்நிலை.

அமரரது ஆத்ம சிவப்பிராப்திக்கு அன்பே உருவான பரம்பொருளின் பாதம் பணிந்து பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலை இந்துக் குருமார் அமைப்பு சார்பில் பகிர்ந்துகொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.