இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க முடியுமா?

117 0

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட  காணிகளை விடுவிக்க முடியுமா? ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை முன்வைத்தார்.

 

யாழ்ப்பாணம்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும்  வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் பங்கேற்புடன்  செவ்வாய்க்கிழமை (25) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முப்படையினரால் கையகப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது  இந்தவிடயம் முன்வைக்கப்பட்டது .

குறிப்பாக நல்லுர் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் தனியாருக்கு செந்த மான காணிகளும் நல்லூர் பிரதேச சபைக்கு செந்தமான  காணி 2013 ஆண்டு இராணுவத்தில் கையகப்படுத்தப்பட்டுள்ளது  அந்த காணியை பெற்றுத்தருமாறு பிரதேச சபை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு காணிவேண்டும் என வேண்டும்  சுகாதார திணைக்களமும் கோரிக்கை முன்வைத்துள்ளது இவற்றை விடுவித்தால்  அதனை அமைக்க முடியும் என நல்லூர் பிரதேச செயலாளரும்  தெரிவித்தார்.

இதன்போது கூட்டத்தில் கலந்து கொண்ட இரணுவ உயர் அதிகாரியிடமும் இது தொடர்பில் அமைச்சரினால்  கோரிக்கை முன்வைக்கப்பட்டது இது தொடர்பாக கோரிக்கை எழுத்து மூலம் கோரிக்கை தருமாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முப்படையினரால்  கையகப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பான விபரங்கள் கிராம அலுவலகர் ரீதியாக கோரப்படுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.