சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது!

18 0

மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் கும்புக பகுதியில் சட்டவிரோத மதுபானம், கோடா மற்றும் உபகரணங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை (20) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 56 லீற்றர்  250 மில்லி லீற்றர்  சட்டவிரோத மதுபானம், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 1706 லீற்றர்  கோடா (10 பீப்பாய்கள்) மற்றும் மதுபானம் வடிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 36 வயதுடைய கோனபொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த விடயம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.