உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

25 0
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  எல்லேவெவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது  உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவராவார்.

இதேவேளை ஹுங்கம பொலிஸ் பிரிவின்  ரன்ன பகுதியிலும் உள்நாட்டில்  தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த ஒரு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரன்ன – லெனே முல்ல பகுதியைச்  சேர்ந்த 43 வயதுடையவராவார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.