நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமித்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலை உட்பட சம்மாந்துறைப் பகுதியில் உள்ள சிற்றுண்டி உற்பத்தி நிலையங்கள், இறைச்சிக் கடைகள் என்பன சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய புதன்கிழமை (19) அன்று சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை இடம் பெற்றது.
இதன் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத குறித்த சிற்றுண்டி சாலை உரிமையாளருக்கு எதிராகவும் இரண்டு உணவகங்களுக்கும் எதிராகவும் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்ட போது ரூபாய் 30 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
இச்சோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

