தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான தீர்மானம் இன்று !

87 0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள்  பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், இன்று வியாழக்கிழமை  (20) மீண்டும் மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான முடிவு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

2023 ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில், புதன்கிழமை (19) நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

இதன்பின்னர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை புதன்கிழமை (19) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை விசேட  பாதுகாப்பின்  கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.