கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது !

60 0

கொழும்பு –  12 பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  ‘ஹஷிஷ்’ போதைப்பொருள்  மற்றும் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 19 கிலோ கிராம் ‘ஹஷிஷ்’ போதைப்பொருள்  மற்றும் ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.