கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியில் ட்ரம்ப்!

108 0

கிரிமியா உள்ளிட்ட 4 உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று ரஷ்யா விருப்பம் வெளியிட்டுள்ள நிலையில் அதனை செயற்படுத்தும் திட்டம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆராய்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா உக்ரைன் யுத்தநிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக ரஷ்யாஆக்கிரமித்துள்ள கிரிமியாவை அதன ஒரு பகுதியாக அங்கீகரிப்பது குறித்து இந்த நகர்வு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியும் ரஷ்ய ஜனாதிபதியும் 30 நாள் யுத்த நிறுத்தம் குறித்து தொலைபேசி மூலம் பேச்சுகளில் ஈடுபடுபடவிருந்த நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.