அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

95 0
அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தம்பகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று, உயிரிழந்த விவசாயி மேலும் இரண்டு நபர்களுடன் இணைந்து வயலில் வேலை செய்துகொண்டிருந்த போது காட்டு யானை ஒன்று வயலுக்குள் நுழைந்துள்ளது.

இதன்போது விவசாயியும் ஏனைய இருவரும் உயிரை காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பியோட முயன்ற போது காட்டு யானையானது விவசாயியை பலமாக தாக்கியுள்ளது.

காயமடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.