அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் கட்டுமானத்தில் உள்ள நான்கு மாடி கட்டிடத்திலிருந்து ஓடுகளை திருடி வேறு இடத்திற்கு எடுத்துச் சென்ற மருத்துவமனை ஊழியர் உட்பட ஐந்து பேர், மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரியால் பிடிக்கப்பட்டு அனுராதபுரம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் மருத்துவமனையில் ஒரு சிற்றூழியர், மற்ற நால்வரும் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு பங்களிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தொழிலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

