புறக்கோட்டையில் விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து

25 0

கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள சிவப்பு பள்ளிக்கு அருகில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (13) ஏற்பட்டுள்ளது.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.