வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதமோதலின் பின்னர் -ஒருவர் மீது இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகம்

81 0
image
வெள்ளை மாளிகைக்கு வெளியே இனந்தெரியாத நபர் ஒருவர் மீது இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதமோதலின் பின்னரே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலை செய்யும் நோக்கத்துடன் இந்தியானாவிலிருந்து வோசிங்டனிற்கு நபர் ஒருவர் பயணம் செய்வது குறித்து தகவல் கிடைத்ததாகவும்,அந்த நபரை பாதுகாப்பு பிரிவினர் நெருங்கியபோது அவரிடம் துப்பாக்கி இருந்ததாகவும் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதாவும்,அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் இடம்பெற்றவேளை டிரம்ப் வெள்ளை மாளிகையில்  இருக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.