சிறைச்சாலைகள் மற்றும் நன்னடத்தை பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களின் நலனை கருத்திற் கொண்டு விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஆகவே இந்த நாட்டில் வாழும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வரலாற்று காலம் முதல் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் தான் பெண்கள் தமது உரிமைகளை வென்றெடுத்துள்ளார்கள். பொருளாதார பெறுபேற்றின் போது பெண்களுக்கு எந்தளவுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது சந்தேகத்துக்குரியது.இதன் காரணமாகவே பால் சமத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் மகளிர் பாதுகாப்பு தொடர்பில் முழுமையான பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.கல்வி, சுகாதாரம் மற்றும் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சிறுவர் மற்றும் பெண்களின் எதிர்கால நலன் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்ட நலன்புரி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் மற்றும் நன்னடத்தை பராமரிப்பு நிலையங்களில் உள்ள சிறுவர்களின் நலனை கருத்திற் கொண்டு விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஆகவே இந்த நாட்டில் வாழும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம் என்றார்.

