கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

80 0

ராகமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் ராகமை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் கடந்த 05 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ராகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் ராகமை, வெல்பில்லேவ பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 6 கிராம் 380 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் தங்க மாலையும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.