பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு இலஞ்சம் வழங்கிய இருவர் கைது

88 0

குருணாகல் – நிக்கவெரட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு 20,000 ரூபா இலஞ்சம் வழங்கியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தம்பதெனியா மற்றும் அலவ்வ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் என இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், தங்கள் மீது உள்ள குற்றத்தை நீக்குவதற்காக  பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு இலஞ்சம் வழங்கியுள்ளதாக இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நிக்கவெரட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.