பலுகஸ்வெவ பகுதியில் லொறி மோதி யானை காயம் !

82 0
அநுராதபுரம், பலுகஸ்வெவ பகுதியில் லொறி மோதி யானை ஒன்று காயமடைந்துள்ளதாக கணேவல்பொல வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து, காயமடைந்த யானை காட்டுப்பகுதிக்குள் ஓடிச் சென்றதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த யானையின் தந்தம் ஒன்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தினை ஏற்படுத்திய லொறி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

காட்டுப்பகுதிக்குள் சென்ற யானையை தேடும் பணிகளில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்..