களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்தின் மூலம் வருடத்திற்கு 1,000க்கும் மேற்பட்ட சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான எதிர்காலத் திட்டங்களை அவசரமாகத் தயாரிக்குமாறு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்தின் வளாகத்தில் கட்டப்பட்டத்தின் இரண்டு மாடி கட்டிடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்

