ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்தை அடித்து நொறுக்கிய நபர் கைது

93 0
ஒரு தேவையை நிறைவேற்ற ஹம்பாந்தோட்டை பிரதேச செயலகத்துக்குச் சென்ற ஒருவர், அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், அலுவலக சொத்துக்களை சேதப்படுத்தி, அதிகாரிகளைத் தாக்க முயற்சிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அலுவலகத்தின் உட்புறத்தில் நாற்காலிகளைத் தூக்கிச் சென்று கண்ணாடி மற்றும் தளபாடங்களை அடித்து நொறுக்கியுள்ள காட்சிகள் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.