அயல் நாடான இந்தியா உட்பட பல நாடுகள் மீதான வரி சமநிலைப்படுத்தல் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷா டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் செய்துள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் வரி சமநிலைப்படுத்தல் தீர்மானமானது இலங்கைக்கு ஒரு முன் எச்சரிக்கை குறிகாட்டியாக இருக்க வேண்டும் என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தகச் சுவர்கள் அமெரிக்காவிற்கான நமது அணுகலைத் தடுக்கும் முன், அவசர, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் அனுபவமின்மையை காரணமாகக் காண்பித்து இதனை உதாசீனப்படுத்தி விடக் கூடாது.
இந்த சவாலை எதில்கொள்வதற்கு கோப் தலைவராக, நான் உதவத் தயாராக இருக்கிறேன் என அவர் தனது எக்ஸ் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

