வென்னப்புவ பகுதியில் ஒரே மாதிரியான இலக்கத்தகடுகளை கொண்ட இரண்டு கார்கள் கைப்பற்றல்

109 0

ஒரே மாதிரியான பதிவு எண்களைக் கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாய்க்கால் பகுதியில் நபரொருவருக்குச் சொந்தமான வாகனப் பதிவுப் புத்தகம் மற்றும் வாகனப் பரிமாற்ற படிவம் திருட்டு போயுள்ளதாக கடந்த 5 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது,  வாகன பதிவு  இலக்கம் திருடப்பட்ட   காரின் ஒத்த நிறம், இலக்கத்துடன் கார் ஒன்று வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் இருப்பது பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு கார்களும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைக்காக சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.