மினுவாங்கொடை பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் கைது

73 0
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுதபொல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (04)  சட்டவிரோத மதுபானம்,கோடா மற்றும் பீப்பாய்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அளுதபொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த கைது நடவடிக்கையின் போது, 150 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 2,421 லீற்றர் கோடா மற்றும் 14 பீப்பாய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.