கொழும்பிலிருந்து கண்டிக்கு அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகவும், உடலில் எந்த ஆடையும் இல்லாமல் பயணித்த இளைஞன் ஒருவரை, வீதித் தடைகளைப் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு கைது செய்ததாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு வீதியில் அதிக சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞன் பயணிப்பதை பல பொலிஸ் அதிகாரிகள் கவனித்து, அவரை கைது செய்ய பின்தொடர்ந்த போதிலும், அவர்களில் எவராலும் அவரை அடைய முடியவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். கேகாலை மற்றும் மாவனெல்ல பொலிஸார் அந்த நபரைத் துரத்திச் சென்ற போதிலும், அவர்களால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. கடுகண்ணாவை மற்றும் பேராதனை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்த பின்னர், கடுகண்ணாவை பொலிஸார் வீதித் தடைகளைப் பயன்படுத்தி வாகனங்களைத் தடுத்து அந்த நபரைப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, அவர் பீதுருதலாகலைப் பார்வையிட வந்ததாகக் கூறினார். அவர் அஹங்கமவிலிருந்து வந்து கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியதாகவும், திங்கட்கிழமை (03) காலை புறப்பட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்ததாகவும், அவ்வப்போது தான் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டதாகவும் கூறினார். வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது ஆடைகளைக் கழற்றியதாகவும், அவர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் போனையும் வழியில் தூக்கி எறிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். அவரது விளக்கமறியல் மார்ச் 19 ஆம் திகதி வரை கண்டி நீதவானால் நீடிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026

