மாகாணசபைத் தேர்தலை தாமதமின்றி நடத்துக

110 0

மாகாண சபைத் தேர்தல்
நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்
ளது . இது மக்களாட்சிக் கோட்பாட்டை
மறுக்கும் ஒரு செயலாகும். எனவே
முன்னைய அரசுகள் விட்ட தவறுகளை
இந்த அரசும் விடாமல் மாகாண சபைத்
தேர்தலை மேலும் தாமதமின்றி நடத்த
வேண்டும்.
இலங்கை தமிழரசு கட்சியின்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் கதிரவேலு சண்முகம்
குகதாசன் இவ்வாறு தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்ட விவாதத்தில்
நேற்று (04) நாடாளுமன்றத்தில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே
இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும்
உரையாற்றுகையில்,
பொது நிருவாக அமைச்சின்
கீழ் நான் பிரதிநிதித்துவ படுத்தும்
திருகோணமலை மாவட்டத்துக்கு
1083 மில்லியன் ரூபா மீண்டுவரும்
செலவுக்காகவும் 168 மில்லியன்
ரூபா மூலதன செலவுக்காகவும்
மொத்தமாக 1251 மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த
ஆண்டை விட 275 மில்லியன் ரூபா
குறைவானதாகும்.

மாகாண சபையானது அரசியல
மைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு
அமைய உருவாக்கப்பட்ட ஒரு துணை
அரசு. அதிகாரப் பகிர்வையும் மக்கள்
பங்குபற்றுதலையும் முதன்மையான
கருப்பொருளாகக் கொண்டு மாகாண
சபைகள் உருவாக்கப்பட்டன.
மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட
பொழுது அவற்றுக்கு வழங்கப்பட்ட
அதிகாரங்கள் சில முழுமையாகவும்,
பல பாதியாகவும் மத்திய அரசால் மீளப்
பெறப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக கமநல சேவைத்
துறையை மத்திய அரசு முழுமையாக
எடுத்துக்கொண்டது. கல்வி, மருத்துவம்,
விவசாயம், நீர்ப்பாசனம் முதலிய
துறைகளில் கணிசமான பகுதிகள் மாகாண சபையிடம் இருந்து மத்திய
அரசு எடுத்துள்ளது. இது கவலை தரக்
கூடிய விடயமாகும்.
பல நாடுகளில், மாகாண சபைகள்
பள்ளிக்கூடங்களை மட்டுமன்றிப்
பல்கலைக் கழகங்களையும் நடத்து
கின்ற சூழலில் தேசிய பாடசாலை என்ற
பெயரில் மாகாண சபைகளின் கீழுள்ள
பள்ளிக்கூடங்களில் பாதியை மத்திய
அரசு பறித்து எடுத்துக் கொள்வது
ஒரு நியாயமான செயற்பாடு அல்ல.
மாகாண சபையில் இருந்து மத்திய
அரசு எடுத்துக்கொண்ட துறைகளை
மாகாண சபைகளுக்கே மீள கையளிக்க
வேண்டும். அத்தோடு மாகாண சபைக
ளுக்கு கூடுதல் அதிகாரங்கள் பகிர்ந்து
அளிக்கப்பட வேண்டும்.
மேலும் மாகாண சபைத் தேர்தல்
நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்
ளது . இது மக்களாட்சி கோட்பாட்டை
மறுக்கும் ஒரு செயலாகும். எனவே
முன்னைய அரசுகள் விட்ட தவறுகளை
இந்த அரசும் விடாமல் மாகாண சபைத்
தேர்தலை மேலும் தாமதமின்றி நடத்த
வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.