சமன் ரத்நாயக்கவின் அடிப்படை உரிமைகள் மனு தள்ளுபடி

153 0

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, சுகாதார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு, உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

நீதிபதிகள் காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுவை உடனடியாக தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.