கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு நான்கு மாடுகள் உயிரிழந்துள்ளன.
மஜ்மா நகர் கொரோனா மையவாடியை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள யானை வேலியில் சிக்கியே இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.
இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


