பா
தாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே”என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவரின் மனைவியின் வீட்டை காணொளி எடுத்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் பன்னல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, மோட்டார் சைக்கிள் , வீட்டை காணொளி எடுத்த கையடக்கத் தொலைபேசி மற்றும் 4,610 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் கொழும்பு புதுக்கோட்டை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் “கெஹெல்பத்தர பத்மே” என்பவருக்கும் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
“கெஹெல்பத்தர பத்மே” என்பவரின் மனைவியின் பெற்றோரை கொலை செய்யும் நோக்கத்தில் சந்தேக நபர்கள் இருவரும் குறித்த வீட்டை காணொளி எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

