ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் குளவிக் கொட்டிற்கு இலக்காகி தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (25) தெமோதரை, எல்ல பகுதியில் உள்ள 9 – வளைவு பாலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே குளவிக் கொட்டிற்கு இலக்கானதாக எல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குளவி கொட்டிற்கு இலக்கான சுற்றுலாப் பயணிகள் இருவரும் 23 வயதுடைய இளைஞனும், யுவதிமாவர்.
அவர்களின் உடல்நிலை பாரதூரமாக இல்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

