பதுளை நகரில் ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இவரை சோதனைக்குட்படுத்திய போது இவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று புதன்கிழமை (26) பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

