அநுராதபுரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு

79 0

அநுராதபுரம், தம்புத்தேகம, மஹபெல்லன்கடவல பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

தம்புத்தேகம, மஹபெல்லன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.