தமிழகத்தில் அதிகாரப்போட்டி நடக்கிறது: பிரேமலதா

335 0

தமிழகத்தில் அதிகாரப் போட்டி நடக்கிறது. பதவிக்கும், பணத்திற்கும் மட்டுமே ஆசைப்படுகின்றனர் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது நிலையான ஆட்சி இல்லை. பதவிக்கும், பணத்திற்கும் மட்டுமே ஆசைப்படுகிறார்கள். அதிகாரப்போட்டி தான் நடக்கிறது. மக்களுக்காக எந்த நல்லதும் செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம், அவரது டிரைவர் மரணம், கொடநாடு காவலாளி கொலை என தொடர்ந்து மர்ம சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழகம் கொலை நகரமாகவே உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டும் தெளிவான அறிக்கை இதுவரை வரவில்லை. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தான் இனி தமிழகத்திற்கு தேவை.
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் எந்த நன்மையையும் செய்யவில்லை. அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு மக்கள் முன் வந்து விட்டார்கள்.டாஸ்மாக் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக பெண்கள், மாணவர்கள் வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.தமிழகத்தை காக்க லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான முதல்வர் வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.