உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்; அமைச்சுசார் ஆலோசனை குழு அங்கீகாரம்

87 0

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதியளித்துள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சர் (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தலைமையில் வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது.

உள்ளூராட்சி அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள தீர்மானத்தை பரிசீலனை செய்து,எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், வரையறுக்கப்பட்ட தொலைக் கல்வி நிலையத்தின் 2021 மற்றம் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையும் இங்கு ஆராயப்பட்டு,அங்கீகரிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்  பிரதியமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதியமைச்சர்கள்,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.