கோனகங்கார பகுதியில் கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

180 0
கோனகங்கார பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யால வனப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் உலர்ந்த கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 35 மற்றும் 43 வயதுடைய மித்தெனிய மற்றும் பாணமுரே பகுதிகளைச்  சேர்ந்தவர்களாவர்.

இந்த கைது நடவடிக்கையின் போது 661 கிலோ 550 கிராம் உலர்ந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கோனகங்கார பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.