கந்தானையில் சட்ட விரோத மதுபானத்துடன் ஒருவர் கைது !

97 0

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெந்துருபிட்டிய பாலத்திற்கு அருகில், சட்ட விரோத மதுபானம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்டவரிடம் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (100 போத்தல்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, கைதானவர் மேலதிக விசாரணைகளுக்காக கந்தானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.