குருணாகல் விபத்து – பேருந்துகளின் சேவை இடைநிறுத்தம்

68 0

குருணாகல், தொரயாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்துகளின் சேவைகளை இடைநிறுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவித்துள்ளது. .

முறையான விசாரணைக்குப் பிறகு இந்த அனுமதிப்பத்திரங்கள் குறித்து மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. .

தோரயாய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மீது, மாற்றுமொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 34 பேர் காயமடைந்தனர். .

குறித்த பேருந்து மணிக்கு சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது