அமெரிக்க வானூர்திகளுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளும் அபாயம் – அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எச்சரிக்கை

262 0

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்க வானூர்திகளுக்கு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மேற்கொள்ளும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் எந்த சந்தர்ப்பத்திலும் அவ்வாறான தாக்குதலை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பிரான்ஸ், சுவிடன், பிரித்தானியா மற்றும் ரஸ்யா போன்ற நாடுகளில் தீவிரவாதிகள், இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உளவு பிரிவின் அறிக்கையில், ஈராக் மற்றும் சிரியாவில் மோதல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளில் சுமார் ஆயிரத்து 900 பேர் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.