துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த டான் பிரியசாத், செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல வீதியை சேர்ந்த 39 வயதுடைய லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் என்ற குறித்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இலங்கைக்கு வந்துள்ளதுடன் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அவருக்கு விதிக்கப்பட்ட விமானப் பயணத் தடையின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

